சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு



 


காத்தான்குடியில் இடம்பெற்ற சர்வதேச  மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு..


(எம்.பஹத் ஜுனைட்)


சர்வதேச ரீதியில் டிசம்பர்-03 திகதி கொண்டாடப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நிகழ்வு காத்தான்குடி பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (23) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.


காத்தான்குடி பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.இஜாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாறா மெளஜூத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.அருள்ராஜ், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் , தொழிலதிபர் எம்.ஐ.எம்.பழீல், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி ராதிகா சுதானந்தன், என்.எம்.எப்.நஜீபா ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்களது திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.