💓தங்கம் வென்று தேசிய மட்ட Chess போட்டியில் விளையாட சபிலுல் லமா தெரிவு..!
இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனம் நடாத்திய போட்டியில் அல்-ஹிலால் வித்யாலயம் சார்பாக பங்குபற்றி சாய்ந்தமருது சபிலுல் லமா அடுத்த சுற்றான கொழும்பில் நடக்கவிருக்கும் தேசிய மட்டம் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனம் நடாத்திய இச்சதுரங்க போட்டித்தொடர் 13.12.2025 கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
11 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நடாத்தப்பட்ட இப்போட்டிகளில் கலந்து கொண்டு முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்
இவர் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்வி பயில்கிறார்.


Post a Comment
Post a Comment