மூன்று வருடங்களாக சொத்துகள் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை எனத் தெரிவித்து முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தொடரப்பட்டிருந்த 3 வழக்குகள் இன்று (19) மீளப் பெறப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்த அரசதரப்பு சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க அதுகுறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன் பிரகாரம் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, ஷிராணி பண்டாரநாயக்கவை மூன்று வழக்குகளில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்துள்ளார்.
அவர் மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையையும் நீக்குவதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

