
சஜின்வாஸ் குணவர்தனவினால் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் யானைக் குட்டியை இன்று பகல் வன ஜீவராசிகள் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
15 வயதுடைய குறித்த யானைக்குட்டி அம்பலாங்கொடை, ஹிரேவத்தை விகாரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த விகாரையில் தடுத்து வைக்கப்பட்டு சஜின்வாஸ் குணவர்தனவினால் பராமரிக்கப்பட்டு வந்த குறித்த யானைக் குட்டியை இன்று பகல் கொழும்பில் இருந்து சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
