இலங்கை- ஜேர்மன் பொருளாதார அபிவிருத்தி கலந்துரையாடல்



ஜேர்மனுக்கு உத்தியோகபுர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி தலைமையிலான விசேட தூதுக் குழு இன்று அந்நாட்டிலுள்ள வியாபாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வியாபார அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட அமைச்சர்களான தயா கமகே மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் ஜேர்மன் வியாபாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த கலந்துரையாடலில் அந்நாட்டின் வியாபார சபையின் தலைவரும் கலந்துகொண்டுள்ளார். இக்கலந்துரையாடலை ஜேர்மன் பெட்ரல் பொருளாதார மற்றும் அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.