உத்தேச அரசியல் சீர்திருத்தங்களுக்கு கருத்தறியும் அமர்வு இன்று நுவரெலியாவில்




(க.கிஷாந்தன்)

உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் அமர்வு ஒன்று 19.02.2016 அன்றும், 20.02.2016 அன்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.

இவ் அமர்வில் நுவரெலியா பிரதேச பொது மக்கள் தங்களின் கருத்துகளை வாய் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் முன்வைக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

19.02.2016 அன்றும், 20.02.2016 அன்றும் நடைபெறும் இந்த அமர்வில் பொது மக்கள் உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான 20 அம்சங்களை கொண்ட கோரிக்கைகளுக்கு சுருக்கமானதும் தெளிவானதுமான யோசனைகளையும் கருத்துகளையும் முன்வைக்க முடியும் என வருகை தந்துள்ள இரண்டு சட்டதரணிகள் அடங்கிய குழுவுக்கு முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.