போர்ச் சூழலில் நிர்க்கதியாகி, போக்கிடமின்றி அகதிகளாய் அலைந்து திரிகிற மக்களது அவலம், அடிக்கடி மனசைப் பிழியும்.
இப்படி அலைபவர்களில் அதிகமானோர் குழந்தைகளும் பெண்களும் வயோதிபர்களுமாய் இருப்பதை யாரிடம் சொல்லி அழுவது?
அடிக்கடி பார்க்கும், கேட்கும் அல்லது படிக்கும் செய்திகளின் பின்னே உறைந்து போக இயலாமல்- அவற்றை மேம்போக்கில் எளிதாகக் கடந்து போக முடியாமல்- தவித்த ஒரு empathy மனநிலையில், எப்போதோ எழுதிய கவிதை இது.
எனக்குள் என்னதான் நேர்கிறது?
இருளடைந்த நெடுநிலத்தின் வழியே
கால்கள் களைத்து
விழிகள் மழுங்கி வீழும் வரைக்கும்
நாம் நடந்தோம்;
நடந்து களைத்தோம்.
யாரெமைத் துரத்தியது
துரோகம் நிறைந்த துப்பாக்கிகளே?
கால்கள் களைத்து
விழிகள் மழுங்கி வீழும் வரைக்கும்
நாம் நடந்தோம்;
நடந்து களைத்தோம்.
யாரெமைத் துரத்தியது
துரோகம் நிறைந்த துப்பாக்கிகளே?
நினைவுப் பெருவெளியில் அலைகையில்
போரிடும் உனது பாடலால் திடுக்குற்றேன்.
மக்கிப் போன எலும்புக் கூடுகளில்
நீயதை இசைத்தாய்.
தொண்டைக் குழிக்குள் சிக்கித் திணறும்
உயிர்களின் மரண ஓலத்தால்
உனது கானம் அமர கானமாயிற்று.
போரிடும் உனது பாடலால் திடுக்குற்றேன்.
மக்கிப் போன எலும்புக் கூடுகளில்
நீயதை இசைத்தாய்.
தொண்டைக் குழிக்குள் சிக்கித் திணறும்
உயிர்களின் மரண ஓலத்தால்
உனது கானம் அமர கானமாயிற்று.
ஆன்மாவே வலிக்க
உயிரைச் சுண்டியிழுக்குமிக்
கொலைக்கரங்கள் யாரினது?
யாரினது துரோகம் நிறைந்த துப்பாகிகளே?
உயிரைச் சுண்டியிழுக்குமிக்
கொலைக்கரங்கள் யாரினது?
யாரினது துரோகம் நிறைந்த துப்பாகிகளே?
மனிதர்கள் நிறைந்த தெருக்களில் நான் அலைகிறேன்.
சிலபோது சுவரில் ஒரு பல்லியைப் போல்
ஒண்டியிருக்கிறேன்.
ஒண்டியிருக்கிறேன்.
சிலபோது காரணமின்றியே அழுகிறேன்.
சிலபோது அழக்கூட முடியாமல் தோற்கிறேன்.
சிலபோது அழக்கூட முடியாமல் தோற்கிறேன்.
பீதியில் உறைந்த கண்களும்
களைப்படைந்த உணர்வுகளுமாய்
எங்கோ எதையோ வெறித்திருக்கிறேன்.
களைப்படைந்த உணர்வுகளுமாய்
எங்கோ எதையோ வெறித்திருக்கிறேன்.
எனக்குள் என்னதான் நேர்கிறது?
சிராஜ் மஷ்ஹூர்

