சனத் தலைமையிலான கிரிக்கெட் தெரிவுக்குழு இராஜினாமா?



சனத் ஜயசூரிய தலைமையிலான தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழு இராஜினாமாச் செய்வதற்குத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கிரிக்கெட் சபையின் உயர் மட்ட அதிகாரிகளின் அழுத்தங்கள் காரணமாக இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இம்முறை தென் ஆபிரிக்க சுற்றுலாவுக்கான தெரிவின் போது தெரிவுக்குழுவின் எந்தவொரு உறுப்பினரையும் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தெரிவுக் குழு உறுப்பினர்கள் தென்னாபிரிக்க சுற்றுலாவின் போது, அந்நாட்டுக்குச் சென்று முழுமையாக தங்கியிருக்க அனுதி கோரியதாக கிரிக்கெட் சபை குற்றம்சாட்டியுள்ளது. இந்த வேண்டுகோளை கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளதாகவும் சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.