கம்பஹா வேயங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
பாதாள உலக கோஷ்டியை சேர்ந்த உதம்விட சமரே என்பவரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வேயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த காரொன்று மீது நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தின் போது குறித்த காரில் நான்கு பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது பலத்த காயமடைந்த மற்றுமொருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிட்டம்புவ பகுதியிலிருந்து வேயங்கொட பொருளாதார மத்திய நிலையத்திற்கு பயணித்த குறித்த கார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள்
கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

