ஆடவர் அஞ்சலோட்டத்தில் முதற் தடவையாக தங்கம் வென்ற கிழக்கு




தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் ஆடவருக்கான 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் முதல் தடவையாக கிழக்கு மாகாண அணி தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது.
மாத்தறை கொட்டவில மைதானத்தில் நடைபெற்று வரும் 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இரண்டாவது நாள் இன்றாகும்.
இன்று காலை நடைபெற்ற ஆடவருக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஊவா மாகாணத்தின் இந்துனில் ஹேரத் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.
800 மீற்றர் தூரத்தை அவர் 01 நிமிடம் 51 செக்கன்களில் கடந்தார்.
மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கயந்திக்கா அபேரத்தின தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
இவர்கள் இருவருமே ஆசிய உள்ளரங்க போட்டிகளில் பங்கேற்று நேற்றைய தினமே தாயகம் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை ஆடவருக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் பாசில் உடையார் வௌ்ளிப்பதக்கத்தை வென்றார்.