’உதவிகளை வழங்கத் தயார்’



பலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்துவகையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்தார்.
இலங்கை தேசத்துடன் மிக நெருக்கமாக செயற்பட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த, உலகின் முன்மாதிரி தேசமாக எழுந்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக உதவும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 72வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (23) பிற்பகல் நியூயோர்க் நகரில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.