(SUHAIB UMARULEBBE)
அக்கரைப்பற்று - 06ம் குறிச்சி 21 ஆம் பிரிவிலுள்ள பட்டினப்பள்ளி வீதியிலுள்ள வடிகான் நிரம்பிய நிலையில் மழை நீர் வடிகானின் மேலால் செல்கின்றது. அதனால் துர்வாடையும் அசுத்தமான பொருட்களும் வெளியேறிவருவதைக் கண்டு அப்பிரதேச மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
வடிகானை துப்பரவு செய்வது சம்பந்தமாக கடந்த வருடம் மற்றும் இவ்வருடத்திலும் அது விடயமாக RDS மற்றும் அப்பிரதேச மக்கள் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு எழுத்து மூலமாக அறிவித்திருந்த போதிலும் அது விடயமாக இதுவரையில் காத்திரமான எதுவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
அதனைத் தொடர்ந்து ஆத்திரமுற்ற பிரதேச மக்கள் பலர் ஒன்றினைந்து வடிகானின் சிறு பகுதியை துப்பரவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும்,அக்கரைப்பற்று டீன்ஸ் வீதி, அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயத்தை, அண்டிய பகுதிகளில் டெங்கு நேயாளிகள் இனங் காணப்பட்டுள்ளனர்.குப்பைகள்,மற்றும் சுரட்டைகள், போன்றவை வடிகான்களில்,அதிகரித்துக் காணப்பட்டுள்ளது,இது பற்றி பல தடைவைகள் முறையிட்டும்,எத்தகைய நடவடிக்கையும் மாநாகர ஆணையர் முன்னெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



Post a Comment
Post a Comment