-கி.லதா-
கல்வி வளர்ச்சியில், உலகில், தலைசிறந்த நாடாக, முதல் இடத்தில் உள்ளது, பின்லாந்து.
அப்படி என்ன சிறப்புள்ளது, பின்லாந்து நாட்டு கல்வி முறையில்...
அங்கு, ஏழு வயதில் தான், ஒரு குழந்தை பள்ளிக்கு செல்ல துவங்குகிறது.
எல்லா நேரமும், கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு அசைவிலும், ஒலிகளில் இருந்தும் கற்க ஆரம்பிக்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் கூட, குழந்தைக்கு கல்வி தான்.
இவற்றில் இருந்து, வேரோடு பிடுங்கி, வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு வளர்ச்சி அடையும் என, எண்ணுவது, மூடநம்பிக்கை.
ஏழு வயதில் பள்ளி செல்லும் பின்லாந்து நாட்டு குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் கூட, ஆண்டின் பாதி நாட்கள் தான், பள்ளி செல்கிறது; மீதி நாட்கள் விடுமுறை.
பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான்; அந்நேரத்திலும் கூட, படிப்புக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம், இசை, ஓவியம், விளையாட்டு மற்றும் பிற கலைகளுக்கு கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஓய்வறை உண்டு; படிக்க பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.
முக்கியமாக, 13 வயது வரை, 'ரேங்கிங்' என்ற தரம் பிரிக்கும் கலாசாரமோ, மதிப்பெண் அட்டையை தந்து, பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும், வன்முறையோ இல்லை.
பெற்றோர், தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்து, பெற்றுக் கொள்ளலாம்.
கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமே என்ற மன உளைச்சலும், சக மாணவர்களை போட்டியாளர்களாக கருதும் மனப்பாங்கும் இல்லை. மேலும், இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவதும் இல்லை; மாணவர்களுக்கு எந்த பாடம் பிடிக்கிறதோ, அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்.
ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு மருத்துவர் இருப்பார்; அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து, ஆலோசனைகள் வழங்குவார்.
ஒரு பள்ளியில், அதிகபட்சமாக, 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு, அதிகமான எண்ணிக்கை இருக்கக் கூடாது.
முக்கியமாக, பின்லாந்தில், தனியார் பள்ளிகளே கிடையாது; அங்கு, கல்வி என்பது, முழுக்க முழுக்க அரசின் வசம்.
கோடீஸ்வரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழையாக இருந்தாலும், அனைவரின் குழந்தைகளும், ஒரே பள்ளியில் தான் படிக்க வேண்டும். 'என் பொண்ணு, 'இன்டர்நேஷனல்' பள்ளியில் படிக்கிறா...' என்று, 'சீன்' போட முடியாது.
அனைவருக்கும் சமமான கல்வி தரம் என்ற உத்தரவாதம் உள்ளது. அதனால் தான், பின்லாந்து நாட்டில், 99 சதவீதம் குழந்தைகள், ஆரம்ப கல்வியை பெற்று விடுகின்றனர். அதில், 94 சதவீதம் பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர்; 'டியூஷன்' என்ற அருவருப்பான கலாசாரம், அந்நாட்டுக்கு அறிமுகமே இல்லை.
தேர்வுகளை அடிப்படை முறைகளாக கொள்ளாத இந்த கல்வி முறையில் பயின்று வரும் மாணவர்கள் தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில், முதல் இடங்களை பிடிக்கின்றனர். 'இது எப்படி சாத்தியப்படுகிறது...' என, கல்வியாளர்கள் திகைக்கையில், அந்த புதிருக்கான விடையை, ஐ.நா., சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்துள்ளது. அது, உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐ.நா., சபை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது; இதில், பின்லாந்து நாடு, எப்போதும் முன்னணியில் இருக்கிறது.
மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை, ஆர்வத்துடன் சுவைப்பதில், புதிர் எதுவும் இல்லை தானே!
உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், அதன் பிரதிநிதிகளும், பின்லாந்து கல்வி முறையின் சிறப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்காக, அந்நாட்டை நோக்கி குவிகின்றனர்.
உலகின், 56 நாடுகளில் இருந்து, 15 ஆயிரம் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் செல்கின்றனர். இதன் மூலம், அந்நாட்டின் அன்னிய செலவாணியில், கணிசமான சதவீதம், கல்விச்சுற்றுலாவின் மூலமே அந்நாட்டுக்கு கிடைக்கிறது.
ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ் மாலைகளை, பின்லாந்து நாட்டின் கல்வியாளர்களும், அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக் கொள்வது இல்லை.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'பின்லாந்தின் கல்வி முறை தான், உலகிலேயே சிறந்தது என, சொல்ல முடியாது. ஏனெனில், இந்த ஆய்வில், எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில், இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது; எங்களை விட, சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது...' என்கின்றனர்.
பின்லாந்து நாட்டில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போல, மிகுந்த சமூக கவுரவம் உடையது.
அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில், ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவது தான், லட்சியம்!
அதேநேரம், அங்கு ஆசிரியர் ஆவது, அத்தனை சுலபம் அல்ல. மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து, ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிட பள்ளிகளில் சேர்ந்து, கடும் பயிற்சி எடுக்க வேண்டும்; பின், ஆறு மாதம் ராணுவ பயிற்சி; ஒரு ஆண்டுக்கும் மேலாக, பள்ளிகளில், நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி.
ஏதாவது ஒரு பாடத்தில் புராஜெக்ட். குழந்தை உரிமை பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்ட திட்டங்கள் குறித்த தெளிவுக்காக, தேசிய அமைப்புகளில் இருந்து சான்றிதழ். தீயணைப்பு, தற்காப்பு பயிற்சி மற்றும் முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று என, ஆசிரியர் பயிற்சிக்கு, ஏழு ஆண்டுகளை செலவிட வேண்டும்.
இப்படி, ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில், பின்லாந்து நாட்டு அரசு மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள் தான், அங்கு, கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கியுள்ளது!

Post a Comment
Post a Comment