பள்ளேகம மாணவர் மின்ஷான் அஹமட் நீரில் மூழ்கி உயிரிழப்பு



கலஹா- வாடியாகொட- கருகல்ஓயா நீர்த்தேக்கத்துக்கு நீராடச் சென்ற 14 வயது பாடசாலை மாணவனொருவன் காணாமல் போயுள்ளான்.
தெல்தொட்டை- பள்ளேகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் இன்று பகல் தனது நண்பருடன் நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த போது, திடீரென நீரில் மூழ்கியுள்ளார். எனினும் இவரைக் காப்பாற்றுவதற்கு அவரது நண்பன் முயற்சித்த போதிலும், அது பலனளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் உடபிட்டிய- ஹல்- ஹுன்னா பாடசாலையில் தரம் 9இல் கல்வி பயிலும் மாணவனான மின்ஷான் அஹமட் என கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.