அமைச்சரவை நியமன தாமதிற்திற்கான காரணம்?


புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிறுகிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து, 48 மணி நேரத்தினுள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என அரசாங்க தரப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது. என்றாலும் இதுவரை புதிய அமைச்சரவையின் ஒரு அமைச்சர் கூட சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவில்லை.
ஏற்கனவே அரசாங்க கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த அங்கத்தவர் பட்டியலில், சிலவற்றுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து மீண்டும் கலந்துரையாடல்கள் இருதரப்பினருக்கு இடையிலும் நடைபெற்றன.
இந்நிலையியல் அமைச்சரவையில் இடம்பெறவேண்டிய அங்கத்தவர் பட்டியலை இன்று மாலை ஐக்கிய தேசிய முன்னணி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அறியமுடிகிறது. இதற்கமைய நாளை அல்லது வெள்ளிக்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்கக்கூடும்.
அதேவேளை தற்பொழுது ஜனாதிபதியின் கீழ் காணப்படும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை அரச தரப்புக்கு வழங்க ஜனாதிபதி மறுப்புத் தெரிவித்தவருவதாக அறியமுடிகிறது. மேலும் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு தொடர்பிலும் இதுவரை இறுதி முடிவொன்று எடுக்கப்படவில்லை என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நிதியமைச்சைத் தனக்கு வழங்காவிட்டால் கட்சியுடன் முரண்படாமல், பின் வரிசையில் அமர்ந்துகொள்ள மங்கள சமரவீர தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவி கருணாநாயகவும் விட்டுக்கொடுப்புக்குச் சம்மதிக்கவில்லை எனவும் தெரியவருகிறது.