புகையிரதத்தில் குதித்து இளம் காதல் ஜோடி தற்கொலைஅனுராதபுரம், புளியங்குளம் பகுதியில் 17 வயதுடைய இளைஞன் ஒருவனும் 14 வயதுடைய சிறுமி ஒருவரும் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இன்று (27) காலை அனுராதபுரத்தில் இருந்து மதவச்சி நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்தே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் குறித்த சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காதல் தொடர்பில் குறித்த இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


--- Advertisment ---