மேற்பார்வை



(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று (14) மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் வைத்தியசாலைக்கு வருகை தந்தார். 

மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமி மற்றும் சபை உறுப்பினர்களான ஏ. எஸ். எம்.பைசர், எப்.அஸ்மி ஆகியோர்கள்  அபிவிருத்தி திட்டங்களை ஆராய்ந்தனர். 

மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி இரங்க குணசேகரவுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்தும் அதன் குறைபாடுகள் குறித்தும் ஆராய்ந்தனர். 

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் அல்ஹாஜ் எம். எல். ஏ ஹிஸ்புல்லா  வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யவுள்ளதாகவும், அதற்கான அனைத்து உதவிகளையும் ஆளுநர் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் மொரவெவ வ பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமி  வைத்தியசாலை அதிகாரிகளிடம் தெரிவித்தார். 

இதன்போது வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் தாதியர் பிரச்சினை மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பிலும் கலந்துறையாடப்பட்டது.