யாழ்.மட்டுவில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம், மீசாலை, புத்தூர் வீதி – மட்டுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
கிடுகு ஏற்றியவாறு பயணித்த லாண்ட்மாஸ்ரருடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில், விசுவமடுவைச் சேர்ந்த 24 வயதுடைய ரஜீவன் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


--- Advertisment ---