கடல் வாழ் உயிரினங்கள்

உலகைச் சூழ்ந்திருக்கும் கடலில் இருக்கும் நுண்ணுயிரிகளைப் பற்றி, 2016ல் ஒரு மதிப்பீட்டை கடலுயிரியலாளர்கள் வெளியிட்டனர். 
ஆனால், 'செல்' என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள தகவலின்படி, அதைவிட, 12 மடங்கு அதிகமான வைரஸ் வகைகள் கடலில் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

 அதன்படி, கடல் வாழ் வைரஸ்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
திடீரென, நுண்ணுயிரி மதிப்பீட்டின் அளவு அதிகரிக்கக் காரணம் என்ன? விஞ்ஞானிகள் கடலுக்குச் சென்று வைரஸ்களின் மாதிரிகளை சேகரிப்பது அதிகரித்திருப்பது தான். தவிர, நுண்ணுயிரிகளின் 
மரபணுக்களை ஆராய நவீன கருவிகள் நிறைய வந்தபடியே இருப்பதுவும் முக்கியமான காரணம்.
எல்லாவற்றையும்விட முக்கியமாக, இத்தனை லட்சம் நுண்ணுயிரிகளில், 90 சதவீதம் இதுவரை அறிவியல் உலகம் அறியாதவை. கடலின் பல்நுண்ணுயிரித் தன்மை இருப்பது மிக முக்கியம். அவை தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை உண்டு செறித்து கடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.