அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம்



 


அமெரிக்கா,டெக்சாஸின் போர்ட் ஆர்தரில் உள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


ஜன்னல்கள் அதிர்ந்ததாகக் கூறப்பட்ட வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த தீ விபத்தைத் தொடர்ந்து, போர்ட் ஆர்தர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.


சம்பவத்தின் தன்மையை மதிப்பிடும் வரை மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.