மின்னல் தாக்கியதில்,இளைஞன் பலி

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மின்னல் தாக்கி காஞ்சிரம்குடா ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17வயதை உடைய ராஜ்குமார் என்ற சிறுவன் பலியாகியுள்ளதுடன் பலத்த காற்று வீசியதன் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.
திருக்கோவில் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (17) பலத்த காற்றுடன் மழை பெய்ததுடன் மின்னல் தாக்கமும் அதிகமாகக் காணப்பட்டது.
குறித்த சிறுவனின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.