நோன்பும்-மொயின் அலியும்...!!


நோன்பும்-மொயின் அலியும்...!!

(இங்கிலாந்து கிரிக்கெட் நட்சத்திரமான மொயின் அலியிடம் BBC செய்தி தொலைக்காட்சி எடுத்த நேர்காணல் எழுத்து வடிவில்..)

நிரூபர்:நோன்பு வைத்துக்கொண்டு எப்படி உங்களால் விளையாட்டில் கவனம் செலுத்த முடிகிறது?

மொயின் அலி:விளையாட்டிற்காக என்னால் என் தொழுகையை குறைத்துக்கொள்ள முடியாது.நான் ஓய்வு எடுப்பதாக இருந்தாலும் தொழுகையை முடித்தபின் தான் ஓய்வெடுப்பேன்.தொழுதால் தான் என்னால் சரியாக விளையாட்டில் கவனம் செலுத்த முடிகிறது.

நிரூபர்:ஆனால் 19 மணி நேரம் எப்படி உங்களால் நோன்பும் வைத்துக்கொண்டு,விளையாடவும் முடிகிறது?

மொயின் அலி:நிச்சயமாக சிரமம் தான்.அதனால் என்ன?அதற்குண்டான பலன் எனக்கு உண்டு.நோன்பு வைப்பது எனக்கு நல்ல மன ஆறுதலையும்,உத்வேகத்தையும் தருகிறது.

நிரூபர்:சக வீரர்கள் இதை பற்றி என்ன கூறுகிறார்கள்?

மொயின் அலி:ஆரம்பத்தில் நான் நோன்பு வைத்ததை பற்றி அவர்களிடம் கூறும்போது உணவும்,நீரும் இன்றி எப்படி உன்னால் விளையாட முடியும் என்றார்கள்.ஆனால் இறைவனின் கிருபையால் எனது ஆட்டம் எப்போதும்போல மிக சிறப்பாகவே இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்.அதுமட்டுமின்றி உணவுப் பொருட்களை எனக்கு அருகிலும் அவர்கள் வைக்காமல் உதவி செய்கிறார்கள்.

சொல்லப்போனால் ஒரு நாளில் இரண்டு ஆட்டங்கள் வைத்தாலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும்.அல்லாஹ்விற்காக நோன்பு வைக்கிறோம்,அதுதான் இதில் முக்கியம்.