ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சட்டத்தரணி வழக்குத் தாக்கல்


fகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நீதிமன்றத்தை அவமதித்தார் எனக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து, தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்து, சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன, உயர் நீதிமன்றில் நேற்று (06) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ரூபவாஹினி  ஒளிபரப்புச் சேவையில் இடம்பெற்ற நேர்காணல்  ஒன்றின்போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், நீதிபதிகள் குறித்து கருத்துகளை, ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டிருந்தார் என, அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆளுநர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கடந்த 13 ஆம் திகதி, நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களே, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, அவர் குறித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
--- Advertisment ---