சாட்சியங்களை வழங்கும் பூஜித ஜயசுந்தர


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியங்களை வழங்க பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆரம்பித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், ஏப்ரல் 29 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.