கல்முனை மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொஷன் விழா

பாறுக் ஷிஹான்

கல்முனை மற்றும் சாய்ந்தமருது வர்த்தக சங்கங்களின் அனுசரணையுடன் கல்முனை மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட  பொஷன் விழா வேலை  முன்னேற்பாடுகளை  கல்முனை மேயர்  நள்ளிரவு(16) மேற்பார்வை செய்தார்.

இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும்  கல்முனை மாநகர  பொஷன் விழா தொடர்பான  ஆராய  இரவு   கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  அங்கு சென்றதுடன் விழா ஒழுங்கிற்கான சகல ஏற்பாடுகளையும் கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரருடன் இணைந்து  ஆராய்ந்துள்ளார்.

இதன் போது  கல்முனை மாநகர சபை உறுப்பினர்  அப்துல் மனாப்   சாய்ந்தமருது மாளிகைக்காடு  வர்த்தக சங்கம்  கல்முனை பஸார் மற்றும் கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும்  அதில் பங்கேற்றிருந்தனர்.

மேலும் இவ்விழாவின் பிரதான நிகழ்வு இன்று(16) மாலை 6 மணியளவில் கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் முக்கிய உரையாற்றவுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த தேரர்

 இவ்வழாவின் நோக்கம் தேசிய சகவாழ்வுக்காக முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் பொருட்டும்  இன நல்லுறவுக்கு குந்தகம் ஏற்படுவதை தவிர்க்கு முகமாவும் பல்லின மக்கள் வாழ்கின்ற கல்முனை மாநகர பஸார் பகுதியில் பொஷன் அலங்காரங்களை அமைத்து  அன்னதான ஏற்பாட்டையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கல்முனை வர்த்தகர் சங்கம்  சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம்  கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகளுக்கு தனிப்பட்ட நன்றிகளை இவ்விடயத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இவ்விழா கல்முனை மாநகர ஐக்கிய சதுக்கத்தில்   இன ஐக்கிய பொசன் விழாவாக நடைபெறுவதற்கு மேற்கூறியவர்களே பிரதான காரண கர்த்தாக்கள் ஆவர்.இவ்வழாவானது கல்முனை மாநகர சபையின் ஒருங்கிணைப்பில் கல்முனை வர்த்தகர் சங்கம்  சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம்  கல்முனை கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் என்பன  இணைந்து மேற்கொள்வது சிறப்பாகும்.

மேலும் இவ்விழா இடம்பெறும் போது  கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தகர்களும் பணியாளர்களும் பங்குபற்றும் பொருட்டு   பிற்பகல் 4.00 மணியுடன் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடிஇ ஒத்துழைப்பு வழங்கும்  தீர்மானத்தை வரவேற்பதாக அவர் மேலும் கூறினார்.


--- Advertisment ---