விஷேட ஆராதனை






(க.கிஷாந்தன்)
21.04.2019 அன்று நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் அந்த கோர தாக்குதலில் காயமடைந்து சிக்ச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடையயும் வேண்டி 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் விஷேட ஆராதனையும் திருப்பலி ஒப்புக் கொடுத்தலும் நடைபெற்றது.
ஆலயத்தின் பங்கு தந்தை வணக்கத்துக்குரிய அருட்தந்தை நியூமன் பீரிஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மத்திய மாகாண ஆயர் அதி வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் வியாணி பர்ணான்டோ கலந்து கொண்டு விஷேட பூஜையையும் திருப்பலி ஒப்பு கொடுத்தலையும் நடாத்தினார்.
இந்த குண்டு தாக்குதலில் சிக்கி உயிர் நீத்த அட்டன், தலவாக்கலை, மஸ்கெலியா பகுதிகளை சேர்ந்த சிறு குழந்தை உட்பட ஆறு பேரின் குடும்ப அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி நடைபெற்ற பூஜையின் போது உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஏனையவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி வழிப்பாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த திருப்பலி ஒப்புக் கொடுத்தல் பூஜையில் அதிகளவானவர்கள் கலந்து பிராத்தனைகளில் ஈடுப்பட்டனர்.