அரபியக் கலாசாரத்தைக் கைவிட்டு,இலங்கைக்கு உரித்தான கலாசாரத்தைப் பின்பற்றுங்கள்!


(newsin.asia)
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று (08) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கூட்டாக சந்தித்து, தங்களின் இராஜினாமா பின்புலத்தை விளக்கமாக எடுத்துக் கூறினார்கள்.

அத்துடன் முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துவரும் நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷ முன்வந்து நாட்டு மக்களுக்கு இதுபற்றி தெளிவுபடுத்த வேண்டும்.

இதன் போது கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச, அரபியக் கலாசாரத்தைக் கைவிட்டு,இலங்கைக்கு உரித்தான கலாசாரத்தைப் பின்பற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார் பாரம்பரியமாக இலங்கை முஸ்லிம்களுக்கென்று கலாசாரம் உண்டு அதனைப் பின்பற்றினால் போதுமாகும். தனது மாவட்டமான ஹம்பாந்தோட்டையிலுள்ள முஸ்லிம்கள் இலங்கை்ககு உரித்தான பாரம்பரியக் கலாசாரத்தைப் பின்பற்றுவதை தான் நன்கறிவேனென்றும் குறிப்பிட்டுள்ளதாக (newsin.asia) செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.