நிந்தவூர் பகுதியில் தாயினால் கொல்லப்பட்ட இரட்டைக் குழந்தைகள்

9 மாதங்கள் நிரம்பிய இரட்டைப் பெண் குழந்தைகள் கழிவறையில்  வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நிந்தவூர் 14ம் பிரிவு 153 மௌலானா வீதி  பகுதியில்  திங்கட்கிழமை  (29) காலை வீடு ஒன்றில் குளியலறையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள போதிலும்  இப்படுகொலையை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் குழந்தைகளின் தாயாரான  26 வயதுடைய சந்தேக நபர் நிஹாமுதீன் அஹமட் அமீஸா என்பவர்   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளள்ளார்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை  பொலிஸார் அம்பாறை தடபவியல் பொலிஸார்    விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகிக்கப்படும் குழந்தைகளின் தாயார் மனநோயாளியாக காணப்படுவதாகவும்  நிந்தவூர் ஆதார வைத்தியாசலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர்  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிப்படுகிறது.

அத்துடன்   வீட்டில் இருந்த  குழந்தைகளின் தந்தையான   அலியார்  சியாதுல் ஹக்கிடம்  (வயது-36) விசாரணை முன்னெடுக்கப்படுகிறதுடன்  சம்பவம் இடம்பெற்ற வேளை  குறித்த இரட்டைப் பெண் குழந்தைகள் காலை தானே   கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்ததாகவும்  அறுத்த  கத்தியை அவ்விடத்தில் வைத்துவிட்டு பின்னர்  தனது கணவரிடம் பிள்ளைகளின் கழுத்தை அறுத்து விட்டேன் என கூறியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இரந்து தெரிய வந்துள்ளது.


Advertisement