வழக்கறிஞருக்கு எதிராக முறைப்பாடு

குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர வழக்கறிஞர் மனோஜ் கமகோவிற்கு எதிராக முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். 

ஊடகவியாலாளர் சந்திப்பின் போது அவருக்கு அச்சுறுத்தல் விடுத்தாக தெரிவித்த அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். 

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்று இருந்தது. 

இதன்போது குறித்த வழக்கறிஞர், வைத்தியர் ஷாபி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளை விமர்சனம் செய்திருந்தார். 

அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் அவர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். 

குறித்த அச்சுறுத்தல் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர இன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.