ஹிஸ்புல்லா குற்ற ஒழிப்பு பிரிவில் முன்னிலையானார்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
அவருக்கு எதிராக, செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், வாக்குமூலமளிக்கவே ஹிஸ்புல்லா முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா ​தனக்கு தொலைபேசி மூலம்  மரண அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவித்து, கந்தசாமி இன்பராசா என்ற நபரால், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி   ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வாக்குமூலமளிக்கவே கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


--- Advertisment ---