நியூஸிலாந்து 249 ஓட்டங்கள்,முதல் இன்னிங்ஸில்

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. 

காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

துடுப்பெடுத்தாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பில் ரோஸ் டெய்லர் 86 ஓட்டங்களையும் ஹென்றி நிகலஸ் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 5 விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர். 

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 

அதில் 15 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதுடன், 8 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

11 போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


--- Advertisment ---