வெள்ளை வான் யுகம் மீண்டும் எமக்கு வேண்டுமா?


“வெள்ளை வான் கலாசாரத்துக்கு நாமே முடிவு கட்டினோம். வீழச்சியடைந்த பொருளாதாரத்துக்கும் புத்துயிர் கொடுத்தோம். எனவே, மீண்டும் வெள்ளை வான் யுகத்தை நோக்கிப் பயணிக்கலாமா?”
– இவ்வாறு கேள்வி எழுப்பினார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட நிலையில், குருணாகல் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆடையையும் , முகத்தையும் மாற்றுவதால் மட்டும் நாட்டில் மாற்றம் வரப்போவதில்லை. போர் முடிவடைந்த பின்னர்கூட – 10 ஆண்டுகளாக நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்களால் (ராஜபக்ச ஆட்சி), இனிவரும் ஐந்தாண்டுக் காலப்பகுதிக்குள் அதை எவ்வாறு செய்ய முடியும்?
வெள்ளை வான் கலாசாரத்துக்கு நாமே முடிவு கட்டினோம். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்துக்கும் புத்துயிர் கொடுத்தோம். எனவே, மீண்டும் வெள்ளை வான் யுகத்தை நோக்கிப் பயணிக்கலாமா?” – என்றார்.