#அமேசான் காட்டுத்தீ, நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்?

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
உலகின் மிகப் பெரிய மழைக்காடு அமேசான். இந்த காடுகளுக்குள் 9 நாடுகள் அடங்கி உள்ளன என்றால் நீங்களே அதன் பிரமாண்டத்தை உணர முடியும். ஒன்பது நாடுகள்; Nine nations
This region includes territory belonging to nine nations. The majority of the forest is contained within Brazil, with 60% of the rain forest, followed by Peru with 13%, Colombia with 10%, and with minor amounts in Venezuela, Ecuador, Bolivia, Guyana, Suriname and French Guiana.
உலகின் மிகவும் அடர்ந்த காடான இந்த காட்டுப் பகுதிகளில் பல வகை அரிய மரங்கள், மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. மிக பழமையான பழங்குடியின மக்களும் இங்கு வசித்து வருகின்றனர்.
உலகின் மிகவும் அடர்ந்த காடான இந்த காட்டுப் பகுதிகளில் பல வகை அரிய மரங்கள், மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. மிக பழமையான பழங்குடியின மக்களும் இங்கு வசித்து வருகின்றனர். 
பழங்குடியினர் ஈக்குவடார் நாட்டின் எல்லையில் உள்ள பாஸ்தாசா பகுதியில் வோராணி எனப்படும் பழங்குடியினர் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு எண்ணெய் வளமும் ஏராளமாக உள்ளது. எனவே எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் வேட்டைக்காடாக இப்பகுதியை மாற்ற முயன்றன. ஈக்குவடார் அரசும் இதற்கு உதவ முன்வந்தது. எண்ணை நிறுவனங்கள் எனவே வோராணி பழங்குடியினர் அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். எண்ணெய் நிறுவனத்தை எங்கள் இடத்திற்குள் குத்தகைக்கு விட்டால், தங்கள் வாழ்வாதாரம் அழியும் என்றும், வனப்பகுதிக்கு அழிவு ஏற்படும் எனவும் வழக்கில் தெரிவித்தனர். 

அரசோ வெறும், ஆய்வு மட்டும்தான் செய்யப்போகிறோம் என சப்பைக்கட்டு கட்டியது. ஆனால், அரசின் கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் பிரிவின் கீழ் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருவதையும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் இப்பகுதியை நம்பி உள்ளதையும் கருத்தில் கொண்டு எண்ணெய் கிணறுகள் தோண்ட அரசுக்கு தடை விதித்தது நீதிமன்றம். கடந்த மே மாதம்தான் இந்த தீர்ப்பு வெளியாயானது. பராகுவே பகுதி இந்த நிலையில்தான், அமேசான் காட்டுத் தீயை இந்த வழக்கின் தீர்ப்புடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 
பழங்குடியினருக்கு எதிராக கார்பொரேட்டுகள் நடத்தும் சதி என்று, இதைப் பற்றி வர்ணிக்கிறார்கள் அவர்கள். தற்போது எரியும் அமேசான் தீ ஈக்வடாரில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள பராகுவேயில் உள்ளது. இருந்தாலும் நெட்டிசன்கள் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. இந்த காட்டுத் தீயால், அதிக வனப்பகுதிகள் அழிக்கப்படலாம் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. பாதுகாப்புக்கு ஆட்டம் பழங்குடியினர் தொடர்ந்த வழக்கில் பெற்ற வெற்றி அமேசான் மழைக்காடுகளின் பாதுகாப்பிற்கு அடித்தளமாக அமைந்தது. இருப்பினும், இரண்டு வாரங்களுக்கும் மேலாக எரியும் தீ மோசமான ஒன்றின் ஆரம்பம். அந்த பாதுகாப்பு அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்துவிட்டது என நெட்டிசன்கள் பலரும் வாதிடுகிறார்கள்.
பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது.
அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசான் மழைக் காடுகள் பலமுறை பற்றி எரிகிறது என எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.
2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுநாள் வரை மட்டும் அமேசான் மழைக் காடுகள் பற்றி எரியும் சம்பவம் 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை எச்சரிக்கிறது.
அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பிரேசிலில் இந்த 8 மாதங்களில் மட்டும் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
குறிப்பாக பிரேசிலின் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள் இந்த காட்டுத் தீ சம்பவங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
#PrayForAmazon ஹாஷ்டேக் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது.
அமேசான் காடுகளில் வரலாற்றில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ஆயுதப் படைகளை அனுப்ப பிரேசில் அதிபர் போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார்.
இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகள் ஆகிய இடங்களுக்கு படையினர் அனுப்பப்படுவர்.
அமேசான் தீ கட்டுப்படுத்தப்படும் வரை பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமலாக்கப் போவதில்லை என்று பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் கூறியுள்ளன.
பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை பின்லாந்து கோரியுள்ளது.
காட்டுத் தீயை அணைக்க சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பிரேசிலின் பல்வேறு நகரங்களிலும் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர்
அமேசானில் காட்டுத் தீ சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதுதான். ஜூலை - அக்டோபர் இடையிலான காலக்கட்டத்தில் இயற்கையாக அதாவது மின்னல்வெட்டின் காரணமாக காட்டுத் தீ ஏற்படும். ஆனால், மரம் வெட்டுபவர்கள், விவசாயிகள் நிலத்தை தங்கள் தேவைக்காக பயன்படுத்தி கொள்வதற்காக தீ வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அமேசானில் இவ்வாறான காட்டுத் தீ ஏற்பட வலதுசாரி கருத்தியல் கொண்ட பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூதான் காரணம் என்று சூழலியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அதாவது பொல்சனாரூ அரசின் கொள்கைகள் காட்டு அழிப்பை ஊக்குவிக்கிறது. காடுகளை அழித்து விவசாயம் செய்ய, மரங்கள் வெட்ட, வனத்தை மேய்ச்சல் நிலமாக மாற்ற அவர் ஊக்குவிக்கிறார் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.
அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமைREUTERS
இயற்கைக்கான உலகளாவிய நிதி அமைப்பும், காட்டு அழிப்புதான் இந்த காட்டுத்தீக்கு காரணமென குற்றஞ்சாட்டுகிறது.
இப்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என அவர்கள் சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.
பொல்சனாரூவும் அமேசான் தீ தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், போதுமான வசதிகள் இல்லாததால் எங்களால் 40 தீயணைப்பு வீரர்களை மட்டுமே அனுப்ப முடியும்" என்ற தொனியில் பதில் அளித்தார்.
மேலும் அவர், இந்த காட்டுத்தீ சம்பவங்களுக்கு அரசுசாரா அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என குற்றஞ்சாட்டினார்.
"அரசுசாரா அமைப்புகளுக்கன நிதியை குறைத்தால் அதற்கு பழிவாங்க அவர்கள் இப்படி செய்திருக்கலாம்" என்றவரிடம், இதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, "நான் அவர்கள் மீது சந்தேகம்தான்படுகிறேன். குற்றஞ்சாட்டவில்லை" என்றார்.
பருவநிலை மாற்றத்தை ஒப்புக் கொள்ளாதவர் வலதுசாரி சித்தாந்தம் மீது நம்பிக்கை கொண்ட பொல்சினாரூ. தேர்தல் பிரசாரத்தின் போதே, "பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவேன்" கூறி இருந்தார்.

பழங்குடிகள்

இந்தக் காட்டுத் தீ மற்றும் காட்டு அழிப்பு ஆகியவற்றால் முதலில் பாதிக்கப்படுவது அமேசானில் வாழும் பழங்குடிகள்தான்.
அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஏறத்தாழ 9 லட்சம் பழங்குடிகள் பிரேசிலில் உள்ள அமேசான் வனப்பகுதியில் வாழ்கிறார்கள். அமேசானுக்கு ஏற்படும் எந்த சிறு பாதிப்பும் முதலில் இவர்கள் மீதுதான் தாக்கம் செலுத்தி வருகிறார்கள்.
அமேசானுக்கு எதிரான நடவடிக்கையை தங்களுக்கு எதிரான நடவடிக்கையாக கருதும் இவர்கள் பொல்சனாரூ அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ஏன் நாம் கவலைக் கொள்ள வேண்டும்?

அமேசானில்தானே காட்டுத்தீ. இதற்காக நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா?
இதற்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கின் ட்வீட்தான் பதில், 'நம் வீடு பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது' என்கிறார்.
இந்த புவியின் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை அமேசான் காடுகள்தான் உருவாக்குகின்றன. இதுவொரு சர்வதேச நெருக்கடி என ட்வீட் செய்துள்ளார்.
நாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டுமானால் அமேசான் உயிருடன் இருக்க வேண்டும்.


Advertisement