காத்தான்குடி பிரதேச செயகத்தில், வரலாற்றில் ஓர் ஏடு


காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கான முதல் முஸ்லிம் பெண் நிருவாக உத்தியோகத்தராக சித்தி ஜாயிதா நியமனம்

(எம்.எஸ்.எம். நூர்தீன்)

காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கான புதிய நிருவாக உத்தியோகத்தராக திருமதி சித்தி ஜாயிதா ஜலால்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 20 வருட காலம் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய மேற்படி சித்தி ஜாயிதா ஜலால்தீன், விஷேட தரத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து உள்ளக உள்நாட்டலுவள்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கான நிருவாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கான புதிய நிருவாக உத்தியோகத்தராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளதுடன் இதற்கு முன்னர் திருகோணமலையிலுள்ள மாகாண கல்வியமைச்சு, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, காத்தான்குடி, மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலகங்களில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றியிருந்தார்.

காத்தான்குடி மத்தியஸ்த சபையின் உறுப்பினரான இவர், சிங்கள மொழிக்கான தேசிய வளவாளராகவும் கடமையாற்றி வருவதுடன் எழுத்தாளருமாவார்

காத்தான்குடி பிரதேச செயலக வரலாற்றில் செயலகத்துக்கான முதல் முஸ்லிம் பெண் நிருவாக உத்தியோகதர் இவவாகும்

முன்னாள் கிராம உத்தியோகத்தர் இப்றாலெவ்வை (சலு சல) அவர்களின் மகளும், சட்டத்தரணி ஜ.எல். அஸ்ஹரின் சகோதரியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது