150 அடி பள்ளத்ததினைப் பதம் பாய்ந்த அம்பியூலன்ஸ் வண்டி


(க.கிஷாந்தன்)
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்ட நானுஓயா பங்களாஅத்த பகுதியில் 27.10.2019 அன்று அதிகாலை 1.30 மணியளவில் அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் டயகம பிரதேச வைத்தியசாலையில்  இருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற அரச அம்பியூலன்ஸ் வண்டி, நோயாளியை வைத்தியசாலையில் இறக்கி விட்டு மீ்ண்டும் டயகம வைத்தியசாலையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வேளையிலேயே வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக, பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  
இச்சம்பவத்தின் போது, அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியும், உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வருகின்றனர்.
நானுஓயா பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து பாரந்தூக்கி இயந்திர உதவியின் மூலம், விபத்துக்குள்ளான அம்பியூலன்ஸ் வண்டியை இழுத்து பாதைக்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.