இராக், பற்றியெரிகின்றது


இராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த இதேபோன்ற போராட்டங்களின்போது இராக் முழுவதும் சுமார் 150 பேர் இறந்தனர்.
அவர்களில் பாதிப்பேர் ராணுவம் மற்றும் அரசு அலுவலக கட்டடங்களுக்குள் நுழைய முற்பட்டபோது இறந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
போரால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் வேண்டும், ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி அங்கு மக்கள் போராடி வருகின்றனர்.
போராட்டங்களை கட்டுப்படுத்த அளவுக்கும் அதிகமான படைகளை அதிகாரிகள் பயன்படுத்தியதை இராக் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இராக் மதகுருக்களும், ஐக்கிய நாடுகள் மன்றமும் வன்முறைகளைக் கைவிட அனைத்து தரப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத உள்பிரிவுகளின் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்துகொள்வதை ஷியா முஸ்லிம்கள் தலைமை வகிக்கும் அரசு நீக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.