நிந்தவூரின் 04 வது பெண் சட்டத்தரணி றிம்சானா


நிந்தவூரின் 04 வது பெண் சட்டத்தரணியாக றிம்சானா சத்தியப்பிரமாணம்...!

நிந்தவூர் 01ம் பிரிவைச் சேர்ந்த சுலைமான் பாத்திமா றிம்சானா கடந்த 13ம் திகதி உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நிந்தவூர் வன்னியார் வீதியைச் சேர்ந்த இவர்
தனது ஆரம்பக்கல்வியை நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் பயின்றார். பின்னர் சாதாரண கல்வியை கல்முனை மஃமூத் கல்லூரியில் கற்றார்.

இதன் பின்னர் நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் தனது உயர்கல்வியைப் பயின்ற இவர், 2008ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பினை நிறைவு செய்த இவர், கொழும்பு சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு பரீட்சையில் தோற்றி சித்தியும் பெற்றார்.

இவர் ஓய்வுபெற்ற மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் சுலைமான், பாயிஸா வதூத் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், சட்டத்தரணி முஹம்மட் நாஷிக் அவர்களின் துணைவியுமாவார்.
Reports; HazzenSaajith


Advertisement