உலகைச் சிரிப்பாட்டி, உள்ளுர அழுதோர்

இவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் என்ன தெரியுமா? அவர்கள் முகத்தில் இருக்கும் சிரிப்பும்... அவர்கள் அனைவரும் பிரபலமானவர்கள் என்பது மட்டும் இல்லை. இவர்கள் அனைவருமே மன அழுத்தம் தாழாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள்.
பணமும் புகழும் இவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கவில்லை. இவர்கள் வாழ்ந்த காலத்தில் சுற்றியிருந்த மனிதர்கள் இவர்களின் மனதின் தேவைகளை உணர்ந்திருக்கவில்லை. பரிவான பாசமான வார்த்தைகளை யாரும் கூறவில்லை. ஆனால் இவர்கள் இறந்த பின் உலகமே கண்ணீர் சிந்தியது.

ஒருவர் வாழும் காலத்தில் அன்பைப் பரப்புங்கள். ஒவ்வொருவருக்கு உள்ளும் நிகழும் அவர்களின் பிரச்சினைகளையும் மன உழைச்சல்களையும் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். அவர் இறந்த பின் “இந்த பெண் முதலிலேயே உதவி கேட்டிருக்கலாமே?” என்று சொல்லிக் கொள்வதில் எந்த பிரயோசனமும் இல்லை.

மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு உதவி கேட்கத் தெரியாது... நீங்களாக உணர்ந்து அரவணைத்து கொள்ளுங்கள்.


Advertisement