அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பாலியல் துஷ்பிரயோகங்கள் ஊழல்களை குறித்த ஆதாரம் உள்ளது


பாறுக் ஷிஹான்

வைத்திய அத்தியட்சகரின்  நடத்தை கோலங்களும்  அதிகார துஷ்பிரயோகங்களும்  அண்மைகாலங்களாக தன்னை தாக்குவதாகவும்   சட்டரீதியாக அல்லாமல் பசுதோல் போர்த்திய புலியாக மேலும்  அதிகரித்துள்ளதனால் தனது  உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதனால்  தான் ஒரு பெண் என்ற காரணத்தால் என்னால் தனியாக போராட முடியவில்லை என மகளீர் சங்கங்களையும் அணுகியுள்ளேன் என  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்   கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தராக   செல்வி ஆர்.தேவாமிர்ததேவி குறிப்பிட்டார்.

 கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளரும் கல்முனை மாநகர உறுப்பினருமான   பஸீரா றியாஸ்  தலைமையில்  ஞாயிற்றுக்கிழமை(8) கல்முனை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார். 

மேலும் தனது கருத்தில்

நான் இந்த வைத்தியசாலைக்கு வருகைதந்து பணியை தொடர்ந்த நாளிலிருந்து எனது பணியை சரிவர தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்கவில்லை. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எஃப் .ரகுமான் அவர்களின் நடத்தை கோலங்கள் அவரின் அதிகார துஷ்பிரயோகங்கள் அண்மைகாலங்களாக  சட்டரீதியாக அல்லாமல் பசுதோல் போர்த்திய புலியாக அதிகரித்துள்ளது . எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை  நான் ஒரு பெண் என்ற காரணத்தால் என்னால் தனியாக போராட முடியவில்லை என மகளீர் சங்கங்களையும் அணுகியுள்ளேன். அவர் ஊழல்இஇலஞ்சம்இ சண்டித்தனமானவர்களை தனக்கு கீழ் வைத்துக்கொண்டு அதட்டி வருகின்றார்.

நேற்று(7) அனைத்து தாதியர்களையும் தனது  அடக்குமுறையை பயன்படுத்தி கலந்துரையாடல் மற்றும் ஊடக சந்திப்பு ஒன்றினை போலியாக ஏற்பாடு  மேற்கொண்டு எனக்கெதிராக வீண் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றார். இவ்வாறான ஒருவர் எவ்வாறு சிறந்த   நிர்வாக நடவடிக்கையை  மேற்கொள்வார்.இவர் தொடர்ச்சியாக  நிர்வாக  சீர்கேட்டையே செய்து வருகின்றார்.  இவரது நடத்தைக்கு பின்னால் செல்லும் தாதியர்களும் தாதிய தொழிலுக்கே தகுதியற்றவர்கள். இவர்களின் துர்நடத்தைகளை மிக விரைவில் ஆதாரப்படுத்துவேன்.

மேலும்   குண்டர்களை பயன்படுத்தி எனக்கு அச்சுறுத்தல் விடுவிப்பதுடன்  திட்டமிட்டு சமையலறையில் பணிபுரியும் காடையர்களை பயன்படுத்தி தொடர்ச்சியாக  அராஜகத்தை மேற்கொள்கின்றார்.  இதனால் எனது பாதுகாப்பிற்காக  நேற்று 119 என்ற பொலிஸ் அவசர சேவைக்கு அழைத்து விடயத்தை தெரிவித்தேன் .இந்த விடயம் வைத்திய அத்தியட்சகருக்கு தெரியவந்தது .   இதனால் என்னை  திட்டினார்?பின்னர் தான்  யார் என்று தெரியுமா ?  என்னோட அதிகாரத்தை காட்டினால் தாங்க மாட்டீர்? எனது அரசியல் பலம் உனக்கு தெரியும்தானே என அனைத்து  நோயார்கள் முன் என்னை மிரட்டினார் .இதற்கு காரணம்  கடந்த 6 திகதி என்னால்  ஊடகங்களிற்கு  அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  இடம்பெற்ற  பாலியல் துஷ்பிரயோகங்கள்  ஊழல்களை  கூறியமை ஆகும்.

இது தவிர இந்த விடயத்தில்  நான் அங்கு பணிபுரியும் அனைத்து ஆண் தாதியர்களையும் குற்றம் சாட்டவில்லை . குறிப்பிட்ட ஒரு சிலரே இந்த துர்நடத்தையில் ஈடுபட்டனர். அவர்களால் பாதிக்கபப்ட்ட பெண் உத்தியோகத்தர்களின் பெயர்களை குறிப்பிட்டால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கபடும். இவர்கள் பெண்களின் பலவீனங்களை பயன்படுத்தி வருகின்றார்கள். இங்கு நடைபெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் எழுத்து மூலம் அனைத்து தரப்பிற்கும் தெரியப்படுத்தி இருக்கின்றேன் என கூறினார்.