வெளிநாட்டு பிரஜைகள் தங்கும் விடுதி உரிமையாளருக்கு திடீர் சுகயீனம்

(க.கிஷாந்தன்)

பண்டாரவளை, எல்ல பகுதியிலுள்ள  விடுதியொன்றின் உரிமையாளர் திடீர் சுகயீனம் காரணமாக இன்று (22.03.2020) முற்பகல் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியில் வெளிநாட்டு பயணிகள் தங்குவார்கள் என்றும், இன்று கூட அங்கு இரண்டு அயர்லாந்து பிரஜைகள் தங்கியிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 10.30 மணியளவில் இவர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சுகாதார பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை வழங்கினர்.

அதன்பின்னர் அவர் நோயாளர் காவு வண்டி ஊடாக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விடுதி உரிமையாளர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். 


Advertisement