தென்கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ்: 98 பேர் பாதிப்பு

இதுவரை சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 41,75,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலியானவர்களின் எண்ணிக்கை 285,971 ஆக உள்ளது, 14,558,62 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 80,397 பேரும், பிரிட்டனில் 32,141 பேரும் பலியாகி உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1559 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று இந்திய சுகாதாரத் துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்,

இந்தியாவில் குணமடைபவர்களின் விகிதம் 31.15% என்ற அளவில் இருப்பதாக லாவ் அகர்வால் தெரிவிக்கிறார்.


Advertisement