குளவி கொட்டுக்கு இன்றும் இலக்காகிய தொழிலாளர்கள் !

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம தோட்ட 5 ஆம் பிரிவில் இன்று காலை 10:00 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 8 பேர் டயகம பிரதேச அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியவர்களில்  7 பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர்.

இவர்கள் இன்று காலை தேயிலை பறித்துக் கொண்டு இருக்கும் போது தேயிலைச் செடியின் அடிப் பாகத்தில் கூடு கட்டப்பட்டு இருந்த நிலையில், குளவிக்கூடு கலைந்து, குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

 பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலமாக  குளவித் தாக்குதல் அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புக்களும் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Advertisement