தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு


வி.சுகிர்தகுமார்
 

 சுவாட் நிறுவனமானது வெளிநாடுகளிலிருந்து மீளத்திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் எதிர்காலத்தில் வெளிநாடு செல்லவிருக்கின்ற இளைஞர்கள், யுவதிகளின் தொழில் திறனை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக சுவீஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் நிதி உதவியுடன் தொழில்திறன் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 211 இளைஞர், யுவதிகளுக்கான தொழில் திறன் பயிற்சியினை வழங்கியுள்ளது.
அத்தோடு அவர்களுக்கான  உதவிகள் வழங்கப்பட்டு அப்பயிற்சிகளை சிறப்பாக பூர்த்தி செய்து உள்ளுரில் தொழில்களை ஆரம்பித்த 54 இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் அவர்களின் பங்களிப்புடன் ரூபா. ஒரு மில்லியன் பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை  இன்று அக்கரைப்பற்று சுவாட் தலைமை அலுவலகத்தில் மிகச்சிறப்பாக நடாத்தியது.

அமைப்பின் தலைவர் வ.பரமசிங்கம்; தலைமையிலும் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் க.பிறேமலதனின் இணைப்பாக்கத்திலும் நடாத்தப்பட்ட நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.டி.எம்.எல்.பண்டாரநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.nஐகதீசன் விசேட அதிதியாகவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வி.பபாகரன் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.கNஐந்திரன் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு.இர்பான் அட்டாளைச்சேனை சர்வமத சமாதான அமைப்பின் தலைவர் ஜனாப்.காசிம் உள்ளிட்டவர்களும்; கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள்  தொழில் திறன் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்காக வழங்கப்படவுள்ள பொருட்களை பார்வையிட்டனர்.
பின்னர் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் ஒரு மில்லியன் பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.

இதேநேரம் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் அமைப்பின் தலைவர் வ.பரமசிங்கத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய அரசாங்க அதிபர் மக்களுக்கான சேவையினையும் தொழில் திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார பொருட்களையும் அரசாங்கமும் அது போல் அரசசார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றது. ஆனால் அவ்வாறு வழங்கப்படும் பொருட்களை மக்கள் முறையாக பயன்படுத்துவதில்லை;. ஆகவே இன்று வழங்கப்படும் பொருட்களை நீங்கள் மட்டும் பயன்படுத்தாது உங்களை சார்ந்தவர்களும் பயன்படுத்தும் வகையில் பாவனை செய்ய வேண்டும் என்றார்.