#அக்கரைப்பற்று : இலஞ்சம் பெற்ற மேற்பார்வை உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்#


#ST.Jamaldeen.

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
நேற்று புதன்கிழமை (08) மன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களை மேற்பார்வை செய்யும் நிர்வாக உத்தியோகத்தர் அங்கு கடமையாற்றும் சுகாதார உதவியாளர் ஒருவரை அவருக்கு விருப்பமான பிரிவுக்கு மாற்றுவதற்கு   15 ஆயிரம்  ; ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.
அதற்கமைய கடந்த புதன் கிழமை (08) காலை வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள தேனீர்சாலையில் வைத்து சுகாதார உதவியாளர் மேற்பார்வை செய்பவரிடம் 10 ஆயிம் ரூபா  வழங்கியுள்ளார் மீதி 5 ஆயிரத்தையும் இம்மாத சம்பளத்தின்போது தருவதாக கூறியுள்ளார் இதன்போது கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்பார்வை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர் விசாரணையின் பின் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.