மருதமுனையில், மோதியது

தனியார் பேருந்து- வேன் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் காயம் 

தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை(19) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் தனியார் பேருந்து பகுதியளவில் சேதமடைந்ததுடன் வேன் முற்றாக சேதமடைந்துள்ளது.

இதன் போது வேனில் பயணம் செய்த நால்வர் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிகக்ப்பட்டுள்ளதுடன் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த விபத்தின் போது பாரிய சத்தம் கேட்டதாகவும் விபத்தில் சிக்கிய வேன் தனியார் சாரதி பயிற்சி பாடசாலை ஒன்றின் பெயரை கொண்டதாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement