இந்திய சுதந்திர தினம்


இந்தியா தனது 74 வது சுதந்திர தினத்தில் இன்று கால் பதிக்கின்றது.இந்தியக் குடியரசுக்கு தமது வாழ்த்துக்களை #ceylon24 காணிக்கையாக்ககின்றது.

முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இந்திய துணைக்கண்டம் மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இசுலாமிய நாடான பாகிஸ்தானாகவும் பிரிந்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு ஆனது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளான மேற்கு மற்றும் கிழக்கு பாகிசுதானிடையே 1971-இல் உள்நாட்டுப் போர் மூண்டதற்குப் பிறகு இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாகிசுதான் வங்காள தேசம் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது. 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது.

இயற்கை வளம், மனித வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த நில அமைப்பு ஆகியவை இந்தியாவின் தலைமை பலங்களில் சிலவாகும். பாகிசுதானுடனான காஷ்மீர் பிரச்சினை, கவலை தரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச் சூழல் சீர் கேடு, ஊழல் ஆகியவை இந்தியா எதிர் நோக்கும் சவால்களில் சிலவாகும்.

இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லி செங்கோட்டையில் தேசிய மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோதி.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், தேசிய கொடியை ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோதி.

காலை 7.34 மணிக்கு சுதந்திர தின உரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோதி சரியாக காலை 9.01 மணிக்கு உரையை நிறைவு செய்து மொத்தம் ஒரு மணி நேரம் 27 நிமிடங்களுக்கு பேசியிருக்கிறார்.