காற்றின் வேகம் அதிகரிக்கும்





 புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், விழிப்புடன் செயற்படுமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் கடல் அலை 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயர்வடையக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



 

கடந்த 24 மணித்தியாலங்களில் 77.5 மில்லிமீட்டர் அதிகூடிய மழைவீழ்ச்சி தெரணியகல பகுதியில் பதிவாகியுள்ளது.


ஹங்வெல்ல பகுதியில் 75 மில்லிமீட்டரும் எஹலியகொட பகுதியில் 68 மில்லிமீட்டரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, மண்சரிவு அபாயம் காரணமாக பதுரலியவில் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் இருந்து வௌியேறி வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.



 

20 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் தற்காலிகமாக கொஸ்குலன – கங்காராம விகாரையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.