மீன் வாடை, பிண வாடையானது இறக்காமத்தில்

 


இறக்காமம் 03 ஆம் பிரிவில் அமையப்பெற்ற மஜிட் வாவி அமிரவிபுர குளக்கட்டு குளத்தில் திடீரென நீர் வற்றியதால் அதிகளவான மீன்கள் இறந்து அழுகிய நிலையில் பிணவாடை வீசி வருவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் விசனிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தில் பிரதானமாக கொண்ட அரச காரியாலயங்கள் இறக்காமம் பிரதேச செயலகம், மதினா புரம் பாடசாலை; இறக்காமம் பொலிஸ் நிலையம்; இறக்காமம் வைத்தியசாலை
குவாசி நீதிமன்றம்; ஆயுர்வேத வைத்தியசாலை; மிருக வைத்தியசாலை; மாணவர்கள் கல்வி கற்கும் மதரசாக்கள்; இப்படி பலவகையான கட்டிடங்கள் உள்ள பகுதியில் குறித்த குளம் அமையப்பெற்றதனால் மக்கள் அதிகமாக இவ்விடங்களுக்கு சென்று வருவதை காணக்கூடியதாகவும் உள்ளது


Advertisement