சரிந்து வீழ்ந்தது,கித்துல் மரம்


 (க.கிஷாந்தன்)

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை கரோலினா பகுதியில் கித்துல் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (14.10.2020) காலை அதிகாலை 4.00 மணியளிவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஒரு வீடு முற்றாகவும், மற்றைய வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இம்சம்பவம் இடம்பெறும் போது ஒரு வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்தாகவும் எனினும் தெய்வதீனமாக எவருக்கும் காயமேற்படவில்லை. மற்றைய வீட்டில் எவரும் இருக்கவில்லை என்றும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.

சம்பவத்தில் இரு வீட்டிலும் உள்ள பொருட்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே அட்டன் கொழும்பு பிரதான வீதியில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளதனால் அவ்விடங்களில் ஒரு வழி பாதை போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொது மக்கள் இணைந்து வீதியில் கொட்டிக் கிடக்கும் மண்ணை அகற்றி வருகின்றனர்.



Advertisement