வெறிச்சோடியது,ஹட்டன்

 


(க.கிஷாந்தன்)

அட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வர்த்தக நிலையங்களும் நேற்றும் இன்றும் மூடப்பட்டுள்ளன. இதனால் நகரப்பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றது.

சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி மக்கள் வீடுகளுக்ளேயே இருக்கின்றனர், ஒரு சிலர் வெளியில் நடமாடுவதை காணமுடிந்தாலும் அவர்களும் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றியுள்ளனர்.

உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவையை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் வழங்கி வருகின்றன. அரச நிறுவனங்களுக்கும் குறைந்தளவான ஊழியர்கள் வருவதையே காணக்கூடியதாக இருந்தது.